Posts

Showing posts from February, 2013

Chicken with plums – அறுந்த நரம்புகள்....

Image
1958, டெஹ்ரான்... வெறுமை சூழ்ந்தழுத்தும் பாதையில் சோகநடை போட்டுக் கொண்டிருக்கிறான் ஈரானின் மிகச்சிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவனான நசீர் அலி. டார்(Tar) எனும் ஈரானிய இசை வாத்தியத்தை வாசிப்பதில் வல்லவனான நசீர் அலி இசையையே தன் தொழிலாகவும் உயிராகவும் மதிப்பவன். தனது கருவி கையிலிருக்கும் போது குடும்பமோ கடமைகளோ அவனுக்குத் தெரிவதில்லை. தனது வாத்தியம் எழுப்பும் இசை ஒன்றே அவன் உணரக்கூடியது. குடும்பச் சண்டை ஒன்றில் அவன் மனைவி அவனது வாத்தியத்தை உடைத்து விட, மனமுடைந்து போய் சோகத்தில் வீழ்கிறான் நசீர் அலி. உடைந்து போன தன் வாத்தியத்திற்கு மாற்றுத் தேடி வாத்தியக் கருவிகளை விற்கும் மிர்சா என்பவனது கடைக்குச் செல்கிறான் நசீர் அலி. மிர்சா நசீர் அலியின் வருகையால் உளமகிழ்ந்து போகிறான். அங்கிருக்கும் வாத்தியத்தை வாசித்துப் பார்த்தும் திருப்தி ஏற்படாத நசீரிடம் தனது கடையின் ஈரப்பதமே வாத்தியத்தின் அபஸ்வரத்திற்குக் காரணம் என்று கூறி ஒரு வாரம் உலர்வான இடத்தில் வைத்திருந்து வாசித்துப் பார்க்குமாறு கேட்கிறான். ஆனால் ஒரு வாரம் கழித்தும் நசீருக்கு அந்த வாத்தியம் திருப்தி தருவதாயில்லை. கோபத்தோடு மிர்சாவிடம்